என் அழகு ஏன் குறைஞ்சிருச்சி தெரியுமா? - அனுஷ்கா விளக்கம்

|

என் அழகு ஏன் குறைஞ்சிருச்சி தெரியுமா? - அனுஷ்கா விளக்கம்  

தொடர்ந்து வெயிலில் ஓய்வில்லாமல் நடித்துக் கொண்டிருந்ததால் என் அழகு குறைந்துவிட்டது என்று நடிகை அனுஷ்கா கூறியுள்ளார்.

சிங்கம் 2 -படத்தில் அனுஷ்காவைப் பார்த்த சிலர் அவர் ஆன்ட்டி ரேஞ்சுக்கு வந்துவிட்டார் என விமர்சித்திருந்தனர். யோகா டீச்சரான அவர் முகத்தில் இத்தனை சீக்கிரம் முதிர்ச்சி எட்டிப் பார்ப்பதாகக் கமெண்ட் அடித்திருந்தனர்.

இந்த நிலையில், தன் அழகு ஏன் இப்படிக் குறைந்துவிட்டது என்று விளக்கம் கூறியிருக்கிறார் அனுஷ்கா.

தொடர்ந்து வெயிலில் நடித்ததாலும், ஓய்வில்லாமல் கால்ஷீட் கொடுத்ததாலும் என் அழகும் கவர்ச்சியும் குறைந்துவிட்டது உண்மைதான்.

சிங்கம்-2, இரண்டாம் உலகம் படங்களில் தொடர்ந்து இடைவெளி இல்லாமல் நடித்தேன். ஐரோப்பா, ஆப்ரிக்கா என பல வெளிநாடுகளுக்கு படப்பிடிப்புக்காக போய் வர வேண்டியிருந்தது. வெயிலில் நின்று நடித்தேன். இதனால் என் அழகை கவனிக்க முடியவில்லை. யோகா, உடற்பயிற்சிகளில் ஈடுபடவும் நேரம் அமையவில்லை.

இப்போது ருத்ரமாதேவி படத்தில் ராணி வேடத்தில் நடிக்கிறேன். இதற்காக வாள் சண்டை, குதிரையேற்றம் பயிற்சிகள் பெற வேண்டி இருந்தது. கடும் வெயிலில்தான் இந்த பயிற்சிகளை பெற்றேன். சரியான தூக்கம் இல்லை. இதெல்லாம் என் முகத்தில் சோர்வை வெளிப்படையாகக் காட்டிவிட்டன. ருத்ரமா தேவி முடிந்ததும் சில தினங்கள் ஓய்வெடுத்தால் எல்லாம் சரியாகிவிடும்," என்றார்.

 

Post a Comment