நடிகை கனகா... குழப்பியடித்த செய்திகள்.. உயிரோடு செய்தியாளர்கள் முன் தோன்றினார்!

|

சென்னை: நடிகை கனகா புற்று நோயால் மரணமடைந்துவிட்டதாக வந்த செய்தியில் உண்மை இல்லை. அவர் உயிரோடு தன் சென்னை வீட்டில் உள்ளார்.

தான் உயிரோடு உள்ளதை நிரூபிக்க இன்று அவசரமாக பிரஸ் மீட் வைத்து செய்தியாளர்கள் முன்பு தோன்றினார்.

நடிகை கனகா... குழப்பியடித்த செய்திகள்.. உயிரோடு செய்தியாளர்கள் முன் தோன்றினார்!  

கரகாட்டக்காரனில் அறிமுகமாகி தென் இந்திய சினிமாவின் முதல் நிலை நாயகியாகத் திகழ்ந்தவர் நடிகை கனகா. பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகள். 40 வயதான கனகா பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி, உடல் நலம் குன்றியிருந்தார். கடந்த சில மாதங்களாக அவரைப் பற்றி எந்த தகவலும் இல்லை.

திடீரென அவரை கேரளாவில் ஆதரவற்றோருக்காக நடிகர் ஜெயராம் நடத்தும் ஆலப்புழா மருத்துவமனையில் சினிமா பிரமுகர் ஒருவர் பார்த்துள்ளார். அதன் பிறகே கனகா பற்றி தெரிய வந்தது.

புற்று நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வந்த நடிகை கனகா இன்று பிற்பகல் மரணம் அடைந்ததாக செய்தி ஏஜென்சிகள் தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து, தொலைக்காட்சி மற்றும் இணைய தளங்களில் செய்திகள் வெளியாகின.

ஆனால் கனகா மரணமடையவில்லை என்றும், அவர் கேரள மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் அவரது அப்பாவும் சித்தப்பாவும் ஊடகங்களுக்கு தெரிவித்ததாகக் கூறப்பட்டது.

இந்த நிலையில் திடீரென கனகா செய்தியாளர்களைச் சந்திப்பதாக தகவல் வெளியானதும், ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அவரது வீட்டில் செய்தியாளர்கள் குவிந்தனர்.

சில நிமிடங்களில் செய்தியாளர்கள் முன் தோன்றிய கனகா, தான் உயிரோடு இருப்பதாகவும், கேரளாவில் சிகிச்சைப் பெற்றதாகக் கூறப்பட்டதில் உண்மை இல்லை என்றும் கூறினார்.

உடனடி செய்திகளுக்கு எப்போதும் ஒன் இந்தியாவுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.
 

Post a Comment