பிரபல மலையாள இயக்குநர் வினயனிடம் உதவியாளராகப் பணியாற்றிய சஜின் வர்கீஸ் இயக்கும் படத்தில் நாயகனாக நடிக்கிறார் விதார்த்.
காசி, அற்புதத் தீவு, என்மனவானில் உள்ளிட்ட படங்களில் வினையனிடம் இணை இயக்குநராக பணியாற்றியுள்ளார் சஜின்வர்கீஸ்.
இந்தப் படத்தில் விதார்த்துக்கு ஜோடியாக முன்னணி நடிகை ஒருவரை நடிக்க வைக்க பேச்சு வார்த்தைகள் நடந்துக்கொண்டிருக்கிறது.
படம் குறித்து சஜின்வர்கீஸ் கூறுகையில், "இதுவரையில் தமிழ் சினிமாவில் சொல்லப்படாத புதுமையான கதையமைப்பு கொண்ட படமாகவும், அனைவராலும் பேசப்படக்கூடிய படமாகவும் இந்த படம் இருக்கும். அனைத்து தரப்பு மக்களுடைய மனநிலையை பிரதிபலிக்கின்ற படமாகவும் இப்படம் இருக்கும்." என்றார்.
படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. சாஸ் கிரியேஷன்ஸ் சார்பில் ஷிகாஜூதின் இந்த படத்தை தயாரிக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளர் ரவிவர்மனின் உதவியாளரான முரளிராமன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். பிற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
Post a Comment