முழுக்க புதுமுகங்களை வைத்து எடுக்கப்படும் ஒரு த்ரில்லர் படத்துக்கு பூவனம் என தலைப்பிட்டுள்ளனர்.
இந்தப் படத்தை மதுரை மீனாட்சி என்சிஎஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. அடர்ந்த காட்டில் இருக்கும் ஒரு பங்களாவில் நடக்கும் ஒரு பெண்ணின் கொலையில் ஆரம்பிக்கிறது படம். அந்தக் கொலையின் பின்னணியை திகிலோடு விவரிக்கும் திரைக்கதையுடன் இந்தப் படத்தை உருவாக்குகிறாராம் கதை வசனம் எழுதி இயக்கும் பிவி முருகன். பாடல்களையும் இவரே எழுதுகிறார்.
வாலாந்தூர் விவசாயி மகன் என் சுப்பையா தயாரிப்பாளராக கோடம்பாக்கத்துக்கு அறிமுகமாகிறார் இந்தப் படம் மூலம். அத்துடன் இவரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
சங்கர் கதாநாயகனாகவும், அமிர்தா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். நடேஷ், கணேஷ், அகஸ்டின், பெனிக்ஸ் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
படத்தை மூணாறு, கொழுக்கு மலை போன்ற இடங்களில் படமாக்கி வருகின்றனர்.
Post a Comment