சூர்யாவின் உயரம் குறித்து எல்லோரும் பேசுகிறார்கள். சிங்கத்துக்கு எதுக்கு ஒட்டகத்தின் உயரம் என்றார் சிங்கம் 2 படத்தில் வில்லனாக நடித்த ரகுமான்.
சமீபத்தில் நடந்த இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் ரகுமான் பேசுகையில், "நான் கதாநாயகனாக நடித்தவன். இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க வேண்டும் என்ற போது முதலில் தயக்கமாக இருந்தது.
படத்தை ஒப்புக்கொண்ட பிறகும் நடிக்க வந்த பிறகும் இந்த தயக்கம் எனக்குள் இருந்தது. கதாநாயகனாக நடித்தவன் வில்லனாக நடிக்கும் போது மிகவும் சங்கடமாக இருக்கும். என் மனம் ஒப்பவே இல்லை. எனக்குள் இருந்த ஈகோ தலையெடுத்துக் கொண்டே இருந்தது. மிகவும் சிரமமாக இருந்தது. அதிலிருந்து வெளிவர மிகவும் கஷ்டப்பட்டேன். ஒரு கட்டத்தில் எல்லாவற்றையும் ஒதுக்கி விட்டு நடிக்கத் தயாராகிவிட்டேன்.
இந்தப் படத்தில் நான் ஒரு கோட் போட்டுக் கொண்டு வருவேன். அது எனக்கு சரியாக அமையவில்லை. வில்லனாக வேறு நடித்து, பிடிக்காத நிறத்தில் கோட் வேறு போட வேண்டுமா? என எரிச்சலாக இருந்தது. இதையறிந்த டைரக்டர் ஹரி தூத்துக்குடியிலிருந்து வெகு தொலைவில் வேறு ஊர் சென்று புதிய கோட் வாங்கி வந்தார். அது அவருக்கு அவசியமில்லை. ஆனால் தன் படத்தில் நடிக்கும் நடிகர் மனம் கோணக் கூடாது என்று அவர் காட்டிய அக்கறை ஆச்சர்யப்பட வைத்தது.
சூர்யா அருமையான நடிகர். அவர் ஆறடி உயரமா.. ஐந்தடியா என்றெல்லாம் கேட்க வேண்டிய அவசியமில்லை. சிங்கத்துக்கு எதுக்குங்க ஒட்டகத்தின் உயரம். சிங்கம் சிங்கம்தான்," என்றார்.
Post a Comment