தலைவன் படத் தயாரிப்பாளர் சித்திரைச் செல்வன் மீண்டும் கைது!

|

சென்னை: தலைவன் படத் தயாரிப்பாளர் சித்திரைச் செல்வன் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

ரூ 11.30 லட்சம் பண மோசடி செய்ததாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சசிகலாவின் அக்கா மகன் பாஸ்கரன் ஹீரோவாக நடித்த 'தலைவன்' சினிமாப்பட தயாரிப்பாளர் சித்திரை செல்வன் மன்னார் குடியை சேர்ந்தவர். இவர் படங்களுக்கு துணை நடிகர்களை ஏற்பாடு செய்தவருக்கு பணம் கொடுக்காமல் அலைக்கழித்து வந்தார்.

இதுபற்றி மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து சித்திரை செல்வனை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

தற்போது சித்திரை செல்வன் மீது மேலும் ஒரு மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டு அதன் பேரில் கைது செய்யப்பட்டுள்ளளார்.

கரூர் உப்பிட்டமங்கலம் பகுதியை சேர்ந்தவர் நாச்சி முத்து (வயது 47). இவர் சென்னை போலீஸ் கமிஷனரிடம் அளித்துள்ள புகாரில், "2007-ல் சித்திரைச் செல்வன் எனக்கு அறிமுகம் ஆனார். ஆக்ரா என்ற படத்தைத் தயாரிப்பதாக கூறி ரூ. 5.30 லட்சமும், ‘தலைவன்' பட தயாரிப்புக்காக ரூ. 6 லட்சம் என மொத்தம் ரூ. 11.30 லட்சம் வாங்கி இருந்தார். இந்தப் பணத்தை உரிய காலத்தில் திருப்பித்தரவில்லை.

பணம் கேட்டதற்கு மிரட்ட ஆரம்பித்தார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுப்பதுடன் எனது பணத்தை வாங்கித்தர முயற்சி எடுக்க வேண்டும், என்று புகார் கூறி இருந்தார்.

இதுபற்றிய மத்திய குற்றப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து சித்திரை செல்வனை மீண்டும் கைது செய்தனர்.

 

Post a Comment