சென்னை: லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா - சமந்தா நடிக்கும் புதிய படத்தின் பூஜை வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்குகிறது.
லிங்குசாமி, அவர் சகோதரர் சுபாஷ் சந்திரபோஸின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் பல வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ளது.
இந்த நிறுவனத்துக்காக ஒரு படம் நடித்துத் தர சூர்யா ஒப்புக் கொண்டிருந்தார். இந்தப் படத்துடன் கவுதம் மேனன் இயக்கும் துருவ நட்சத்திரம் படத்திலும் நடிக்க சம்மதித்திருந்தார்.
இரு படங்களும் ஒரே நேரத்தில் தொடங்குவதாக இருந்தது. ஆனால் கவுதம் மேனன் படம் இன்னும் தொடங்காமல் உள்ளது. கதையில் மாற்றங்கள் செய்ய வேண்டியிருப்பதால் தாமதமாவதாகக் கூறப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் லிங்குசாமி படத்தின் கதை, நடிகர்கள் தேர்வு அனைத்தும் முடிந்துவிட்டதால், அந்தப் படத்தை உடனே தொடங்க சூர்யா சம்மதித்துள்ளார்.
ஆகஸ்ட் மாதம் முதல் இதன் படப்பிடிப்பு தொடர்ச்சியாக நடக்கவுள்ளது.
இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். லிங்குசாமி இயக்குகிறார். லிங்குசாமி - சூர்யா இணைவது இதுவே முதல் முறை.
Post a Comment