விஸ்வரூபம் 2: கமலுக்கு முதலில் உதட்டுக்கு கீழ், தற்போது காலில் காயம்

|

சென்னை: விஸ்வரூபம் 2 படப்பிடிப்பின்போது கமல் ஹாஸனுக்கு காலில் காயம் ஏற்பட்டது.

விஸ்வரூபம் படம் வெளியான கையோடு கமல் அதன் இரண்டாம் பாகத்தை எடுப்பதில் மும்முரமாகிவிட்டார். படத்தின் 90 சதவீத ஷூட்டிங்கை முடித்துவிட்டதாக கமல் சில நாட்களுக்கு முன்பு தெரிவித்தார். மீதமுள்ள வேலையையும் முடித்துவிட்டு படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

விஸ்வரூபம் 2: கமலுக்கு முதலில் உதட்டுக்கு கீழ், தற்போது காலில் காயம்  

இந்நிலையில் சண்டை காட்சி ஒன்றை படமாக்கியுள்ளனர். அப்போது கமல் இருக்கும் கார் மற்றொரு கார் மீது மோதும் முன்பு அவர் வெளியே குதிக்கும்போது அவரது காலில் காயம் ஏற்பட்டது. டூப் வேண்டாம் என்று கூறி கமல் தானாகவே சண்டைக் காட்சியில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக படப்பிடிப்பில் அவரது உதடுக்கு கீழ் காயம் ஏற்பட்டது. அதை அவர் பெரிதுபடுத்தவில்லை. படத்தில் நாயகிகளான பூஜா குமார் மற்றும் ஆண்ட்ரியாவும் சண்டைக் காட்சிகளில் நடித்துள்ளனர்.

அண்மையில் தான் விஸ்வரூபம் ஷூட்டிங் கொடைக்கானலில் நடந்தது.

 

Post a Comment