மும்பை: ஷாருக்கான் நடித்த சென்னை எஸ்க்பிரஸ் படம் இதுவரை ரூ.192.85 கோடி வசூல் செய்துள்ளது. விரைவில் ரூ. 200 கோடியைத் தொட்டுவிடும் என்று நம்பப்படுகிறது.
ஷாருக்கான், தீபிகா படுகோனே நடித்த ஜாலியான படம் சென்னை எக்ஸ்பிரஸ். படம் ரம்ஜான் அன்று ரிலீஸானது. இந்த ரம்ஜான் ஷாருக்கானுக்கு சாதகமாகிவிட்டது என்றே கூற வேண்டும். ரம்ஜானுக்கு ஆந்திராவில் ரிலீஸாகவிருந்த பவன் கல்யாண் படம் தள்ளிப் போனது, தமிழகத்தில் விஜய்யின் தலைவாவுக்கு தடங்கல் வந்தது.
இதனால் ஷாருக்கிற்கு தமிழகம் மற்றும் ஆந்திராவில் கூடுதல் ஸ்கிரீன்கள் கிடைத்தன. படம் ரிலீஸான வேகத்தில் ரூ.100 கோடி வசூல் செய்தது. சென்னை எக்ஸ்பிரஸ் இந்தியா தவிர வெளிநாடுகளிலும் நல்ல வசூலை அள்ளியுள்ளது.
இந்நிலையில் சென்னை எக்ஸ்பிரஸ் இதுவரை இந்தியாவில் மட்டும் ரூ.192.85 கோடி வசூல் செய்துள்ளது. விரைவில் ரூ.200 கோடியைத் தொடும் என்று நம்பப்படுகிறது. 3 இடியட்ஸ், ஏக் தா டைகர் படங்களை அடுத்து இந்தியாவில் அதிக வசூல் செய்த படம் சென்னை எக்ஸ்பிரஸ் தான். மேலும் இந்த ஆண்டில் வசூலில் சக்கை போடு போட்ட படமும் சென்னை எக்ஸ்பிரஸே தான்.
Post a Comment