கோவை: உலகில் ஒரு சூரியன், ஒரு சந்திரன் மாதிரி, ஒரே ஒரு சூப்பர் ஸ்டார்தான். அவர் ரஜினிகாந்த். என்னையோ மற்றவர்களையோ அப்படிக் கூப்பிடாதீங்க, கூச்சமா இருக்கு, என்றார் நடிகர் சிவகார்த்திகேயன்.
கோவை பாபா காம்ப்ளெக்ஸில் வருத்தப்படாத வாலிபர் சங்க இசை வெளியீட்டு விழா நடந்தது.
விழாவில் கலந்து கொண்ட படத்தின் கதாநாயகன் சிவகார்த்திகேயனுக்கு ரசிகர்கள் ஆளுயர மாலை அணிவித்தனர்.
விழாவில் அவரை இளைய சூப்பர் ஸ்டார் என்று கூவி அழைத்தனர் ஆர்வமிகுதியால் ரசிகர்கள்.
அவர்களை அமைதியாக இருக்கச் சொன்ன சிவகார்த்திகேயன் பேசுகையில், "சென்னையில் மழை பெய்தும்போது கூட வியர்க்கும், ஆனால் கோவையில் எப்போதுமே ஜில்லென்று இருக்கிறது.
இந்த மக்களின் அன்பும், பாசமும் வித்தியாசமாக உள்ளது. இந்த படத்தின் சி.டி. மற்றும் டிரைலர் கோவை, சேலம், திருச்சி, ஆகிய இடங்களில் வெளியிடப்பட இருந்தது. அதன்படி கோவையில் முதலில் வெளியிடப்பட்டுள்ளது.
வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படம் ஹாலிவுட் படம்போல் இருக்காது. குடும்பத்துடன் தைரியமாக பார்த்து ரசிக்கலாம். அடுத்த வாரம் ரிலீசாகிறது. நிச்சயம் 100 நாள் ஓடும்.
என்னை இளைய சூப்பர் ஸ்டார் என்றெல்லாம் அழைக்காதீர்கள். என்னை என்றல்ல.. வேறு யாரையுமே கூட அப்படி அழைக்காதீர்கள். உலகில் ஒரே சூரியன், ஒரே சந்திரன்தான். அதுபோல் ஒரே சூப்பர் ஸ்டார்தான். அவர் தலைவர் ரஜினிகாந்த். எனக்கு கை தட்டி ஆரவாரம் செய்தது உற்சாகமாக உள்ளது. ஒரு நடிகனாக எனக்கு இதுவே போதும்," என்றார்.
Post a Comment