'ராஜா தி ராஜா'... லண்டன் இசைமேடையில்... இசைஞானியும் உலக நாயகனும்!

|

லண்டன்: ஐரோப்பாவில் முதல் முறையாக இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடக்கிறது.

லண்டன் நகரில் வரும் ஆகஸ்ட் 24-ம் தேதி நடக்கும் இந்த பிரமாண்ட இசை நிகழ்ச்சியில் இசைஞானியுடன் மேடையைப் பகிர்ந்து கொள்பவர் உலகநாயகன் கமல் ஹாஸன்.

'ராஜா தி ராஜா'... லண்டன் இசைமேடையில்... இசைஞானியும் உலக நாயகனும்!

தி ஓ 2 அரங்கில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் தமிழ் திரையிசையில் பிரபலமாக விளங்கும் எஸ்பி பாலசுப்ரமணியன், ஜெயச்சந்திரன், கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா, எஸ்பி ஷைலஜா, கார்த்திக், சின்மயி உள்பட ஏராளமான பாடகர்கள் பங்கேற்கின்றனர்.

இந்த முறை இசைஞானி இசையில் கமல்ஹாஸனும் மேடையில் பாடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சிறந்த பாடகராகவும் திகழும் கமல்ஹாஸன், தன் சினிமா வாழ்க்கையில் அதிகப் பாடல்கள் பாடியிருப்பது இளையராஜா இசையில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜா தி ராஜா எனும் தலைப்பில் நடக்கும் இந்த இசை நிகழ்ச்சிக்கு இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில், டிக்கெட்டுகள் வேகமாக விற்றுக் கொண்டிருக்கின்றன.

 

Post a Comment