கட்சிகளின் உருட்டல், மிரட்டலுக்கு பணிய மாட்டாராம் 'மெட்ராஸ் கஃபே' ஜான் ஆபிரகாம்

|

டெல்லி: மெட்ராஸ் கஃபே தொடர்பான அரசியல் கட்சிகள், அமைப்புகளின் மிரட்டலை ஏற்க முடியாது என்று ஜான் ஆபிரகாம் தெரிவித்துள்ளார்.

ஜான் ஆபிரகாம் நடித்துள்ள இந்தி படமான மெட்ராஸ் கஃபே நாளை மறுநாள் ரிலீஸ் ஆகிறது. ஆனால் படத்தில் விடுதலைப் புலிகளை தீவிரவாதிகள் போன்று சித்தரித்துள்ளனர் என்று கூறி அதற்கு தடை விதிக்குமாறு நாம் தமிழர் கட்சி மற்றும் மதிமுக ஆகியவை தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன.

கட்சிகளின் உருட்டல், மிரட்டலுக்கு பணிய மாட்டாராம் 'மெட்ராஸ் கஃபே' ஜான் ஆபிரகாம்

இந்நிலையில் படத்தை தயாரித்து நடித்துள்ள ஜான் ஆபிரகாம் கூறுகையில்,

நான் புதிய தயாரிப்பாளர். இதுவரை ஒரு படம் மட்டுமே ரிலீஸ் செய்துள்ளேன் என்கின்றனர். மெட்ராஸ் கஃபே போன்ற படத்தை யாராவது எடுக்க வேண்டும். கட்சிகள், அமைப்புகளின் மிரட்டலை ஏற்க முடியாது. வரும் காலத்திலும் இது போன்ற படங்களை எடுப்போம். இது போன்ற படங்களில் எந்த பிரச்சனையும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

இந்த ஜனநாயக நாட்டில் எனக்கு பேச்சு சுதந்திரம் உள்ளது என்றார்.

 

+ comments + 1 comments

Anonymous
20 August 2013 at 15:41

wrong

Post a Comment