என் பொக்கிஷம் திரும்பி வந்த நாள் இது- சாஷ்டாங்கமாக விழுந்து மீடியாவுக்கு நன்றி சொன்ன சேரன்!

|

என் பொக்கிஷம் திரும்பி வந்த நாள் இது- சாஷ்டாங்கமாக விழுந்து மீடியாவுக்கு நன்றி சொன்ன சேரன்!

சென்னை: காதலும் வேண்டாம் காதலனும் வேண்டாம் என நீதிமன்றத்தில் கூறிவிட்டு மகள் தாமினி தன்னோடு வந்ததில் மிகுந்த சந்தோஷமடைந்த இயக்குநர் சேரன், மீடியாவுக்கு சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி நன்றி தெரிவித்தார்.

நீதிமன்றத்தில் இன்று தாமினி காதல் வழக்கு விவகாரம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது.

பழையபடி தாய் தந்தையுடன் சேர்ந்துவிட்டார் தாமினி.

தன் மகள் திரும்பக் கிடைத்தது சேரனுக்கு அளவற்ற மகிழ்ச்சியையும் நிம்மதியையும் அளித்துள்ளது. இதற்காக அவர் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

நீதிமன்ற வளாகத்தில் ஏராளமானோர் அவரைச் சுற்றி நின்றிருந்தனர். ஏராளமான மீடியாக்காரர்களும் வந்திருந்தனர்.

தரையில் விழுந்து...

அப்போது அனைவர் மத்தியிலும் பேசிய சேரன், 'என் பொக்கிஷம் திரும்பக் கிடைத்துவிட்டது. எனக்கு பக்கத் துணையாக நின்றது மீடியாவும் நண்பர்களும்தான். இந்த நேரத்தில் அவர்களுக்கு நான் என் நன்றியைத் தெரிவிக்கிறேன்," என்று கூறி தரையில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார்.

சேரனின் இந்த செய்கை, வந்திருந்த அனைவரையும் நெகிழ வைத்துவிட்டது.

பேஸ்புக்கில்..

முன்னதாக இன்று காலை பேஸ்புக்கில் சேரன் இப்படி எழுதியிருந்தார்:

"இன்று என் பொக்கிஷம் திரும்பி வரும் நாள்.... அவள் இந்த உலகிற்கு வந்த நாளில் எவ்வளவு பயமும் பதட்டமும் இருந்ததோ அதைவிட 100 மடங்கு இன்று.... இன்று நான் காணப்போகும் வெற்றி எனக்கானது மட்டும் அல்ல... இவ்வுலகில் உள்ள அனைத்து பெற்றோர்களுக்குமானது...."

 

+ comments + 1 comments

Anonymous
22 August 2013 at 09:50

I CAN FEEL THE LOVE OF FATHER FOR HIS DAUGHTER gOD BLESS

Post a Comment