சென்னை: தலைவா படம் வெளியாகும் போது ரசிகர்கள் எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும், எந்த மாதிரி வாசகங்களைத் தவிர்க்க வேண்டும், எந்தெந்த வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து அகில இந்திய இளையதளபதி விஜய் தலைமை ரசிகர்கள் நற்பணி இயக்கம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில் விஜய்யை நாளைய, வருங்கால, எதிர்கால... போன்ற அரசியலைக் குறிப்பிடும் வார்த்தைகளைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அப்படியே குறிப்பிட்டு பேனர்களை வைத்திருந்தால் அதை அகற்றும் உரிமை உங்களுக்கு உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் சட்டமன்றம், பாராளுமன்றம், அரசியல் தலைவர்களின் படங்களை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது என்றும் கூறியுள்ளனர். என்னென்ன வார்த்தைகளைப் பயன்படுத்தி விஜய்யைப் புகழ்ந்து போஸ்டர், பேனர் அடிக்க வேண்டும் என்ற இன்ஸ்ட்ரக்ஷனும் அதில் இடம்பெற்றுள்ளது.
விஜய் ரசிகர் நற்பணி இயக்கம் வெளியிட்டுள்ள துண்டுப் பிரசுரம் இது!
Post a Comment