அடுத்து ஆர்யைவை வைத்து புதிய படம் இயக்கப் போவதாக முன்பு வெளியான செய்திகளை மறுத்து வந்த மகிழ் திருமேனி, இப்போது அதே ஆர்யாவை இயக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
முன்தினம் பார்த்தேனே, அருண் விஜய் நடிப்பில் வெளியான ‘தடையற தாக்க' படங்களை இயக்கியவர் மகிழ்திருமேனி. இவர் தற்போது புதிய படம் ஒன்றை இயக்கவிருக்கிறார். இப்படத்தை ‘நான் அவன் இல்லை', ‘அஞ்சாதே', ‘மாப்பிள்ளை', ‘போடா போடி' ஆகிய படங்களை தயாரித்த ஹித்தேஷ் ஜபக் தயாரிக்கிறார்.
இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் நாயகனாக நடிக்க ஆர்யா ஒப்பந்தமாகியிருக்கிறார். இவருக்கு ஜோடியாக முன்னணி நடிகை ஒருவர் நடிக்கிறார். மற்ற நடிகர்-நடிகையரின் தேர்வு நடைபெற்று வருகிறது.
முற்றிலும் மாறுபட்ட, மிக வித்தியாசமான ஆக்ஷன், திரில்லர் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நவம்பர் மாதம் தொடங்கவிருக்கின்றனர். அதைத் தொடர்ந்து ஸ்பெயின், இத்தாலி, மும்பை மற்றும் லண்டனிலும் படப்பிடிப்பை நடத்த முடிவெடுத்துள்ளனர். அடுத்த வருடம் மே மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கின்றனர்.
இதே அறிவிப்பை முன்பு மறுத்தவர்...
இதே போன்ற ஒரு அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் வெளியானது. அப்போது, ஆர்யாவை தான் இயக்கவில்லை என்றும், தேவையில்லாமல் என் பெயரையும் அவர் பெயரையும் சேர்த்து செய்தி வெளியிட வேண்டாம் என்றும் மகிழ்திருமேனி அறிக்கை விட்டது நினைவிருக்கலாம்!
Post a Comment