ப்ரோ, காட்டு ராஜா மறைமுகமாக மோதும் தேர்தல்

|

சென்னை: படத்தை தயாரிக்கிறவங்க கவுன்சில் தேர்தல் ப்ரோவுக்கும், காட்டு ராஜாவுக்கும் இடையே நடக்கும் போட்டியாம்.

படத்தை தயாரிக்கிறவங்க கவுன்சிலுக்கு வரும் செப்டம்பர் முதல் வாரத்தில் தேர்தல் நடக்கிறது. கவுன்சில் தேர்தல் தானே என்று சாதாரணமாக நினைக்காதீர்கள். பொது தேர்தலை விட பரபரப்பாக வேலைகள் நடக்கிறதாம்.

தலைவர் பதவிக்கு போட்டியிடும் இருவரின் ஆட்களும் தீயா வேலை செய்கிறார்களாம். இது தவிர ஓட்டுக்கு ரூ. 20,000 முதல் ரூ. 1 லட்சம் வரை கொடுக்கிறார்களாம்(அடடா நம்மால் ஓட்டு போட முடியாதே என்று தானே ஃபீல் பண்ணுகிறீர்கள்).

இந்நிலையில் ஒரு அணி தன் ஆதரவாளர்களுக்கு ஸ்டார் ஹோட்டலில் தடபுடல் பார்ட்டி கொடுத்துள்ளது. பார்ட்டிக்கான செலவு மட்டும் ரூ.15 லட்சமாம். இதென்ன பார்ட்டி நாங்கள் கொடுக்கிறோம் பார் என்று எதிர் அணி ஒரு பார்ட்டிக்கு ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறதாம்.

ப்ரோவின் தந்தை தன் பக்கம் வெற்றி பெற பணத்தை தண்ணீராக செலவழிக்கிறாராம். மேலும் எதிர் அணி சார்பாக வைட்டமின் ப. வை வாரி இறைப்பது காட்டு ராஜாவின் சித்தி மகனாம். இது கவுன்சில் தேர்தல் என்றாலும் நிஜத்தில் இது ப்ரோவுக்கும், காட்டு ராஜாவுக்கும் இடையே நடக்கும் போட்டியாம்.

போட்டியில் ப்ரோ வெற்றி பெறுகிறாரா அல்லது காட்டு ராஜா கையோங்குகிறதா என்பதை அறிய வரும் 9ம் தேதி இரவு வரை காத்திருங்கள்.

 

Post a Comment