சென்னை: கலைக் குடும்பம் என்பது பால், சர்க்கரை மற்றும் காபித்தூள் ஆகியவற்றை கலந்த காபி போன்று ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்துக்கு 2013-15 ஆம் ஆண்டுக்கான நிர்வாகிகளைத் தேர்வு செய்ய வரும் செப்டம்பர் மாதம் 7ம் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடந்தது.
விழாவில் வேட்பாளர்களை தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் அறிமுகம் செய்து வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில்,
எந்த ஒரு அமைப்பும் அதன் உறுப்பினர்களின் பிரச்சனைகளை தீர்த்து வைக்க வேண்டும். ஆனால் தயாரிப்பாளர்கள் சங்கம் கடந்த 2 ஆண்டுகளாக அவ்வாறு இல்லாததால் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தது. நான் இங்கு வந்து உரை நிகழ்த்துவதால் பிறருக்கு எதிரி இல்லை. நாம் எல்லாம் எதற்காக கூடி இருக்கிறோம் என்பதை தான் பார்க்க வேண்டும்.
கலைக் குடும்பம் என்பது பால், சர்க்கரை மற்றும் காபித்தூள் ஆகியவற்றை கலந்த காபி போன்று ஒற்றுமையாக இருக்க வேண்டும். கேயார் சினிமாவின் அத்தனை நுணுக்கங்களையும் தெரிந்தவர், அனுபவசாலி, தயாரிப்பாளர், இயக்குனராக இருந்தவர். அவர் தலைமையிலான அணி வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்றார்.
Post a Comment