துபாய்: பாலிவுட் நடிகை கரீனா கபூர் துபாய்க்கு படப்பிடிப்புக்காக வந்தபோது பெருமளவில் ரசிகர்கள் சுற்றிச் சூழ்ந்து விட்டனர். இதனால் பரபரப்பும், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுப் போனது.
சத்யாகிரஹா என்ற படத்தில் நடித்துள்ளார் கரீனா கபூர். அதில் அவருக்கு ஜோடி அஜய் தேவ்கன். படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிக்காக இருவரும்
வந்த இடத்தில் ஒரு நகைக் கடை திறப்பிலும் கலந்து கொண்டார் கரீனா. கரீனாவை நேரில் பார்த்த ரசிகர்கள் அவரை மொய்க்க ஆரம்பித்து விட்டனர். கூட்டத்தினரிடம் சிக்கிய கரீனா திணறிப் போய் விட்டார்.
மேலும் அந்தப் பகுதியில் கூட்ட நெரிசலும் ஏற்பட்டு போக்குவரத்தே ஸ்தம்பித்துப் போனது. பின்னர் போலீஸார் தலையிட்டு ரசிகர்களை விலக்கி விட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
Post a Comment