சென்னை: தலைவா படப்பெட்டி ரதத்தில் வைத்து ஊர்வலமாக நாளை உதயம் தியேட்டருக்கு கொண்டு வரப்படுகிறது.
விஜய்யின் தலைவா படம் ஒரு வழியாக நாளை தமிழகத்தில் ரிலீஸ் ஆகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் ஏக குஷியில் உள்ளனர். தலைவா படத்தின் ரீல்பெட்டியை ரதத்தில் வைத்து நாளை காலை 11 மணிக்கு சென்னையில் உள்ள உதயம் தியேட்டருக்கு கொண்டு வருகின்றனர்.
தலைவா ரம்ஜானுக்கே வர வேண்டியது. ஆனால் தமிழகத்தை தவிர பிற மாநிலங்கள், நாடுகளில் ரிலீஸாகி ஓடிக் கொண்டிருக்கிறது. தலைவா ரிலீஸாகும் குஷியில் விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் விஜய்யை புகழ்ந்து ட்வீட் செய்து கொண்டிருக்கின்றனர்.
மேலும் படம் நிச்சயம் 100 நாட்கள் ஓடும் என்றும், திரையுலகில் ரஜினியைத் தவிர வேறு யாராலும் விஜய்யை அடித்துக்கொள்ள முடியாது என்றும் அவரது ரசிகர்கள் ட்விட்டரில் தெரிவித்துள்ளனர்.
Post a Comment