சென்னை: விஸ்வரூபம் எடுத்த நடிகரின் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க சின் நடிகையை கேட்டுள்ளார்களாம்.
விஸ்வரூபம் எடுத்த நாயகன் 10 அவதாரம் எடுத்த படத்தில் சின் நடிகை ஜோடியாக நடித்தார். அதன் பிறகு சின் இந்தி படங்களில் நடிக்கவே முன்னுரிமை கொடுத்து மும்பையில் செட்டிலாகாவிட்டார்.
இந்நிலையில் விஸ்வரூப நடிகர் லிங்கமான இயக்குனரின் தயாரிப்பில் நடிக்கும் படத்திற்கு கன் நாயகியிடம் கேட்டுள்ளனர். அவரோ கால்ஷீட் பிரச்சனையாக உள்ளது என்று மறுத்துவிட்டாராம்.
இதையடுத்து சின் நடிகையை மீண்டும் விஸ்வரூப நாயகனுக்கு ஜோடியாக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். நாயகன் பத்து அவதாரம் எடுத்த படத்தில் சின் நடிகையைப் பார்த்த ரசிகர்கள் என்னடா ஹீரோயின், சே, வேறு யாரையாவது போட்டிருக்கலாம் என்று அலுத்துக் கொண்டது தயாரிப்பு வட்டத்துக்கு தெரியாது போன்று.
Post a Comment