இளம் படைப்பாளிகள் சினிமாவில் நுழைவதற்கான ஒரு பாதையை அமைத்து தருகிறது தந்தி டி.வி. ‘24 பிரேம்ஸ்' என்கிற பெயரில் புதிய நிகழ்ச்சி ஒன்றை அறிமுகப் படுத்தி இருக்கிறது.
சினிமாவுக்குள் நுழையத் துடிக்கும் இன்றைய இளைஞர்களுக்கு ஒரு விசிட்டிங் கார்டு போன்று இருப்பது குறும் படங்களே. எடுத்து வைத்த குறும்படங்களை வைத்துக்கொண்டு யாரைப் பார்ப்பது என்று வழி தெரியாமல் தடுமாறி நிற்கின்றனர்.
அப்படி இருக்கும் படைப்பாளிகளை தயாரிப்பாளர்களோடு இணைக்கும் முயற்சியை இந்த ‘24 பிரேம்ஸ்' நிகழ்ச்சி மூலம் ஆரம்பித்து வைக்க இருக்கிறது, உங்கள் தந்தி டிவி.இந்த நிகழ்ச்சியில் வாரம் 3 குறும் படங்கள் திரையிடப்படும். அதில் சிறந்த ஒரு படத்தை நிகழ்ச்சியில் நடுவர்களாய் இருக்கும் தயாரிப்பாளர்களும் பார்க்கும் மக்களும் இணைந்து தேர்ந்து எடுக்க இருக்கிறார்கள்.
10-வது வாரத்தின் இறுதியில் வெற்றி பெறும் ஒரு படைப்பாளிக்கு மிகப்பெரிய வாய்ப்பு ஒன்றும் காத்துக் கொண்டிருக்கிறது என்பது இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சம்.
இந்த ‘24 பிரேம்ஸ்' நிகழ்ச்சி தந்தி டி.வி.யில் ஞாயிறு முதல் ஒளிபரப்பாக இருக்கிறது.
Post a Comment