சென்னை: ஹாலிவுட் படமான தி மார்ட்டல் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் - சிட்டி ஆப் போன்ஸ் திரைப்படம் ஆகஸ்ட் 30ம் தேதி இந்தியாவில் ரிலீஸாகிறது.
காசன்ட்ரா கிளேர் எழுதிய பிரபலமான தி மார்ட்டல் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் நாவைத் தழுவி எடுக்கப்பட்ட படம் இது.
இந்தப் புத்தகம் மிகவும் பிரபலமானது. கிட்டத்தட்ட 1.6 கோடி புத்தகங்கள் விற்பனையாகி சாதனை படைத்தது. கடந்த 2 ஆண்டுகளாக விற்பனையில் முன்னணியில் உள்ள புத்தகமும் கூட.
ஹரால்ட் ஸ்வார்ட் இப்படத்தை இயக்கியுள்ளார். இளம் நடிகர்களான லில்லி காலின்ஸ், ஜேமி காம்பெல் போவர், ராபர்ட் ஷீஹான் ஆகியோர் நடித்துள்ளனர்.
அட்வென்ச்சர், பேன்டசி நிறைந்த அதிரடி ஆக்ஷன் படம் இது. இந்தப் படம் 2 மணி நேரம் 10 நிமிடங்கள் ஓடக் கூடியதாகும்.
கிளேரி பிரே என்ற சாதாரண டீன் ஏஜ் சிறுமி, தனது கடந்த காலம் குறித்து தெரிய வருகிறாள். தனது தாயைத் தேடிப் போகும் போகு பல சவால்களையும், அதிர்ச்சிகளையும் சந்திக்கிறார். அது அவளது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் புரட்டிப் போடுகிறது. இதுதான் இப்படத்தின் கதைச் சுருக்கம்.
இது ஒரு சூப்பர் நேச்சுரல் திரைப்படமாகும். இப்படம் இந்தியா முழுவதும் ஆகஸ்ட் 30ம் தேதி திரையிடப்படுகிறது.
Post a Comment