தொடர்பு எல்லைக்குள் வந்தார் அஞ்சலி... திருமணம் குறித்து விளக்கம்!

|

சென்னை: அரசியல் புள்ளியுடன் காதல், திருமணம், அமெரிக்காவில் செட்டில் போன்ற செய்திகளுக்கு இன்று விளக்கம் அளித்துள்ளார் நடிகை அஞ்சலி.

நடிகை அஞ்சலிக்கும் தமிழகத்தின் பிரபல அரசியல் தலைவரின் மருமகனுக்கும் ரகசிய திருமணம் என்றும், இருவரும் அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

தொடர்பு எல்லைக்குள் வந்தார் அஞ்சலி... திருமணம் குறித்து விளக்கம்!

குறிப்பாக தான் நடித்த மதகஜராஜா படத்தின் தெலுங்கு டப்பிங்குக்குக் கூட அவர் வர மறுப்பதாகவும் எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை என்றும் படத்தின் ஹீரோவும் தயாரிப்பாளருமான விஷாலே வருத்தப்பட்டிருந்தார்.

இப்போது இந்த செய்திகளுக்கு விளக்கம் தெரிவித்துள்ளார் அஞ்சலி.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை:

"கற்றது தமிழ் தொடங்கி இன்றுவரை பல்வேறு காலகட்டங்களில் எனக்கு ஊக்கமளித்து ஆதரித்த அனைத்து ஊடகங்களுக்கும் மனமார்ந்த நன்றி.

சமீபத்தில் சுந்தர் சி இயக்கத்தில் விஷாலுடன் நான் நடித்த மதகஜராஜா படத்துக்கு டப்பிங் பேச மறுத்ததாகவும், விளம்பர நிகழ்ச்சிகளுக்கு வர மறுப்பதாகவும், அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருடன் இணைத்தும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

இவை அனைத்தும் முற்றிலும் தவறானவை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

இனி வரும் காலங்களில் என்னைப் பற்றிய செய்திகளுக்கு விளக்கம் தேவை எனில் newsfromanjali@gmail.com என்ற முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்," என்று தெரிவித்துள்ளார்.

 

Post a Comment