நீங்க சொல்ற இடத்துல உண்ணாவிரதமிருக்கிறோம்.. பர்மிஷன் ப்ளீஸ்!- கமிஷனரிடம் விஜய் மனு

|

சென்னை: நீங்கள் அனுமதிக்கும் இடத்தில் உண்ணாவிரதம் இருக்கிறோம். இன்று அல்லது நாளை இதற்கு தாங்கள் அனுமதி தர வேண்டுகிறோம், என இயக்குநர் விஜய், சந்திரபிரகாஷ் ஜெயின் ஆகியோர் கமிஷனரிடம் மனு கொடுத்துள்ளனர்.

தலைவா படம் வெளியாக வலியுறுத்தி இந்த உண்ணாவிரதம் மேற்கொள்ளப்படுகிறது.

நீங்க சொல்ற இடத்துல உண்ணாவிரதமிருக்கிறோம்.. பர்மிஷன் ப்ளீஸ்!- கமிஷனரிடம் விஜய் மனு

மனு

இதுகுறித்து இன்று சந்திரபிரகாஷ் ஜெயின், இயக்குநர் விஜய் ஆகியோர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்துள்ள மனு:

கடந்த 9-ம் தேதி உலகெங்கும் வெளியான தலைவா தமிழகத்தில் மட்டும் வெளியாகவில்லை. மொட்டைக் கடிதங்கள், தொலைபேசி மிரட்டல்கள் காரணமாக படத்தை வெளியிட திரையரங்க உரிமையாளர்கள் மறுத்து வருகிறார்கள். இதனால் தமிழகத்தில் மட்டும் வெளிவராத நிலை ஏற்பட்டு தயாரிப்பாளருக்கும் விநியோகஸ்தர்களுக்கும் மிகுந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

நீங்க சொல்ற இடத்துல உண்ணாவிரதமிருக்கிறோம்.. பர்மிஷன் ப்ளீஸ்!- கமிஷனரிடம் விஜய் மனு

திருட்டு டிவிடி

தமிழகத்தில் மட்டும் படம் வெளிவராததால், படத்தை அனுமதியின்றி இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். புற்றீசல் போல திருட்டு டிவிடி வெளியாகி வருகிறது.

விஜய் உண்ணாவிரதம்

தமிழகத்தில் தலைவா படத்தை வெளியிட பலவகையில் முயற்சித்தும் திரையரங்க உரிமையாளர்கள் வெளியிடாத காரணத்தினால், படத்தில் நடித்த நடிகர் விஜய், அமலா பால் மற்றும் இதர நடிகர் நடிகைகள், தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின், இயக்குநர் விஜய், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார், ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, பாடல் ஆசிரியர் நா முத்துகுமார் மற்றும் பல தொழில் நுட்ப கலைஞர்களும் இந்த உண்ணாவிரதத்தில் பங்கு பெறப் போகிறார்கள்.

நீங்க சொல்ற இடத்துல உண்ணாவிரதமிருக்கிறோம்.. பர்மிஷன் ப்ளீஸ்!- கமிஷனரிடம் விஜய் மனு

நீங்க சொல்ற இடத்துல...

தலைவா திரைப்படம் தமிழகத்தில் உடனடியாக வெளியாகக் கோரி இன்று 16 அல்லது 17-ம் தேதி அரசு அனுமதிக்கும் இடத்தில் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளோம். இதற்கு தாங்கள் அனுமதி அளிக்குமாறு வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்," என்று எழுதியுள்ளார்.

 

Post a Comment