இன்று ரிலீஸாகும் தலைவா படத்தின் டிவிடியை விற்ற மாரிமுத்து, மாரியப்பன் கைது

|

இன்று ரிலீஸாகும் தலைவா படத்தின் டிவிடியை விற்ற மாரிமுத்து, மாரியப்பன் கைது

தூத்துக்குடி: பெரும் பஞ்சாயத்துக்குப் பின்னர் இன்று திரைக்கு வரும் தலைவா படத்தின் டிவிடி விற்ற இருவரை தூத்துக்குடி போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி வடபாகம காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதி பெறாத படங்களின் சிடிக்களும், டிவிடிக்களும் தூத்துக்குடி பகுதியில் விற்கப்படுவதாக ரகசிய புகார்கள் வந்ததால் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் மற்றும் போலீசார் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு கடையில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அங்கு திரைக்கே வராத தலைவா மற்றும் நன்றாக ஓடி கொண்டிருக்கும் சிங்கம் 2, மரியான், ஐந்து ஐந்து ஐந்து, ஆதலால் காதல் செய்வீர், பட்டத்துயானை, சொன்னா புரியாது, உள்ளிட்ட படங்களின் டிவிடிக்களும், வீடியோ பாடல்களும், எம்பி 3 ஆடியோ டிவிடிக்களு விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

இதில் 18 தலைவா பட டிவிடிக்கள் உள்பட 990 புதுப்பட மறறும் அனுமதி பெறாத டிவிடிக்கள் அடக்கம்.

இதுபோல் அங்கு குறி்ச்சிநகர் மெயின் ரோட்டில் ஒரு கடையில் சோதனையிட்டபோது 2260 புதுப்பட டிவிடிக்கள் மற்றும் அனுமதியில்லாத டிவிடிக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மொத்தமாக 2 கடைகளிலும் 3350 டிவிடிக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனை விற்பனை செய்து வந்த அய்யனபன் நகரை சேர்ந்த முனியசாமி மகன் மாரிமுத்து, முத்தம்மாள காலனியை சேர்ந்த மாரியப்பன் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

 

Post a Comment