சென்னை: ஏ.எல். விஜய்யின் தலைவா படக் கதை ஒரு டிவி சீரியலின் கதை என்று சமூக வலைத்தளங்களில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஏ.எல். விஜய் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்துள்ள படம் தலைவா. படம் அறிவித்தபடி கடந்த 9ம் தேதி ரிலீஸாகவில்லை. தலைவா அரசியல் கதையே இல்லை என்று விஜய் கூறி வருகிறார். இருப்பினும் படத்தை வெளியிடுவதில் சிக்கல் நீடித்து வருகிறது. இந்நிலையில் திருட்டு சிடிக்கள் வேறு வெளியாகியுள்ளது விஜய்யையும், அவரது ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இதற்கிடையே தலைவா படத்தின் கதை ஸ்டார் ஒன் இந்தி டிவி சேனலில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒளிபரப்பான பேமிலி பிசினஸ் என்னும் தொடரின் கதையின் தழுவல் என்று சமூக வலைத்தளங்களில் கூறப்பட்டு வருகிறது.
முன்னதாக ஏ.எல். விஜய் இயக்கிய கிரீடம் மலையாளப் படமான 'கிரீடமின்' தழுவல். மேலும் தெய்வத் திருமகள், 'ஐ ஆம் சாம்' என்ற ஹாலிவுட் படத்தின் தழுவல் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment