டொரன்டோ: விஜய் நடித்த தலைவா படம் கனடாவில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு வெளியாகிறது. துபாய் உள்ளிட்ட நாடுகளில் இன்னும் சில மணி நேரங்களில் படம் வெளியாகவிருக்கிறது.
விஜய் நடித்துள்ள புதிய படம் தலைவா ரம்ஜான் ஸ்பெஷலாக நாளை வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகம் மற்றும் இந்தியாவின் இதர மாநிலங்களில் படம் வெளியாவது குறித்து இன்னும் உறுதியான அறிவிப்பு வரவில்லை.
ஆனால் வெளிநாடுகளுக்கு நேற்றே தலைவா படத்தின் ஹார்ட் டிஸ்க்குகள் அனுப்பப்பட்டுவிட்டன. இன்று இந்தப் படத்தின் முதல் காட்சி கனடாவில் திரையிடப்படுகிறது.
பகல் 2.30 மணிக்கு முதல் காட்சி திரையிடப்படும் என படத்தின் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் தெரிவித்துள்ளார்.
துபாய் உள்ளிட்ட நாடுகளில் இன்னும் சில மணி நேரங்களில் படம் திரையிடப்படுகிறது.
தமிழகம் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளில் படம் நாளை வெளியாவது குறித்து இன்று மாலைக்குள் உறுதிப்படுத்தப்படும் என திரையரங்க உரிமையாளர்களுக்கு தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment