ராஜா ராணி இசை வெளியீடு - ரஜினிக்கு நேரில் அழைப்பு வைத்த இயக்குநர்!

|

சென்னை: ராஜா ராணி படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினியை நேரில் அழைத்தார் இயக்குநர் அட்லீ.

புதிய இயக்குநரான அட்லீக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார் ரஜினி.

சமீப நாட்களாக ஏகப்பட்ட பப்ளிசிட்டி இந்தப் படத்துக்கு.

ராஜா ராணி இசை வெளியீடு - ரஜினிக்கு நேரில் அழைப்பு வைத்த இயக்குநர்!

படத்தில் நடித்த நயன்தாராவுக்கும் ஆர்யாவுக்கும் திருமணம் என்று பரபரப்பு கிளப்பி, இருவரும் சர்ச்சில் திருமணக் கோலத்தில் இருப்போது போல படங்களையும் வெளியிட்டனர்.

அடுத்து படத்தின் சிங்கிள் ட்ராக், ட்ரைலர் என ஒவ்வொரு நிகழ்வுக்கும் பெரிய பப்ளிசிட்டி செய்தவர்கள், இப்போது நயன்தாரா- ஆர்யா திருமணக் கோல ஆல்பம் என்று கூறி போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்.

இப்போது படத்தின் இசை வெளியீட்டு விழா. ஜீவி பிரகாஷ் குமார் இசையில் உருவாகியுள்ள பாடல்களை வரும் 23-ம் தேதி சென்னையில் பிரமாண்ட விழாவில் வெளியிடுகிறார்கள்.

இதற்கான அழைப்பிதழை பழைய எல்பி ரிகார்டு வடிவில் அச்சடித்துள்ளனர் (ஏற்கெனவே சேரன் தனது மாயக்கண்ணாடி படத்துக்கு இப்படித்தான் அடித்தார்).

இந்த அழைப்பிதழை இன்று காலை சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் கொடுத்து ஆசி பெற்றார் இயக்குநர் அட்லீ. அவருக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார் ரஜினி.

இயக்குநர் ஷங்கரின் உதவியாளர்தான் அட்லீ என்பது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment