காப்பியடித்தே பிழைக்கிறார்: கலாய்க்கும் ரசிகர்களால் கடுப்பில் இசையமைப்பாளர்

|

சென்னை: காப்பியடித்தே பிழைப்பை நடத்தும் இசையமைப்பாளர் ஒருவரை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கலாய்ப்பதால் மனிதர் டென்ஷனாக உள்ளாராம்.

இடி இடித்தால் வானில் மின்னுமே அந்த பெயரில் வந்த படம் மூலம் கோலிவுட்டில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் விக்டரிராஜ். மனிதர் திரையுலகிற்கு வந்த நாளில் இருந்து கண்டமேனிக்கு ட்யூன்களை காப்பிடியடுத்து வருகிறார். அவரின் சிறப்புத் தன்மை என்னவென்றால் வெளிநாட்டு பாடல்களின் இசையை மட்டும் அல்ல தமிழகத்தில் உள்ள கிறிஸ்தவ பாடல்களின் இசையைக் கூட நைசாக திருடி நமக்கு பிரஷ்ஷாக கொடுத்திடுவார்.

இந்நிலையில் ரசிகர்கள் ஹாலிவுட், பாலிவுட் முதல் பாப் பாடல்கள் வரை அனைத்தையும் கேட்க ஆரம்பித்துவிட்டனர். அதனால் விக்டரிராஜின் குட்டை ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் உடைத்து வருகின்றனர். காப்பியடிக்க பெயர் போன இசையமைப்பாளர் எந்தெந்த பாடல்களுக்கு எங்கெங்கிருந்து இசையை சுட்டார் என்று ஃபேஸ்புக்கில் பெரிய பட்டியலே அளித்துள்ளனர்.

இதனால் காப்பி மன்னன் கடுப்பில் உள்ளாராம். இந்த பட்டியலை மறுக்கவும் முடியாமல், எதிர்க்கவும் முடியாமல் உள்ளதால் சத்தமில்லாமல் இருக்கிறாராம்.

 

Post a Comment