மும்பை: மும்பையில் நடைபெறும் ஜென்மாஷ்டமி உரியடித் திருவிழாவில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜென்மாஷ்டமி திருவிழா நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. வடமாநிலங்களில் மிகவும் ஆரவாரமாகக் கிருஷ்ணஜெயந்தி கொண்டாடப்படுகின்றது.
இந்த விழாவின் ஒரு அங்கமாக, மும்பை ஒர்லி பகுதியில் உள்ள ஜம்போரி மைதானத்தில் மாநிலம் முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான மக்கள் உறியடித் திருவிழாவைக் காணக்கூடுவார்கள். இதில் உயரமான மூங்கில் குச்சிகளை இணைத்து தயிர் நிறைந்த பானை ஒன்று கட்டப்பட்டிருக்கும். இதனை உடைப்பவருக்கு பரிசு கிடைக்கும்.
இந்த ஆண்டு நிகழ்ச்சியினை ஸ்ரீ சங்கல்ப் பிரதிஸ்தான் நன்கொடை அமைப்பைச் சேர்ந்த சச்சின் மற்றும் சங்கீத அஹிர் ஏற்பாடு செய்திருந்தனர்.
ஆண்டுதோறும் பிரபலங்கள் இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கப்படுவார்கள். இந்த முறை பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை அழைக்க என்ற முடிவில் இவர்கள் சென்றபோது, அவர் சம்மதிப்பாரா என்ற சந்தேகத்துடனே சென்றுள்ளனர். ஆனால் இந்நிகழ்ச்சியில் பங்கு கொள்ள ஷாருக்கான் உடனே சம்மதித்து விட்டாராம்.
ஷாருக்கான் உரியை உடைப்பார் என்று தான் எதிர்பார்ப்பதாக சங்கீதா கூறினார். மகாராஷ்டிரா பாணியில் ஷாருக்கானுக்கு டர்பன் அணிவித்து போர்வாளுடன், நாதம் முழங்க வரவேற்க இருப்பதாகவும் அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியை பற்றி அறிந்துள்ள ஷாருக்கான், இவர்களின் கோவிந்தாக்களை சந்திக்க வேண்டும் என்று நகைச்சுவையுடன் குறிப்பிட்டாராம்.
சமீபத்தில் ஷாருக்கான் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இதில் ஷாருக்கான் பேசும் சாதாரண மனிதனின் சக்தியை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்ற வசனம் மிகவும் பிரபலமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Post a Comment