புகைப்படக்காரர் என்று நினைத்து பாதுகாவலரை பிடித்து தள்ளிய ஹாலிவுட் நடிகர்

|

புகைப்படக்காரர் என்று நினைத்து பாதுகாவலரை பிடித்து தள்ளிய ஹாலிவுட் நடிகர்

லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவில் ஹாலிவுட் நடிகர் ராபர்ட் பேட்டின்சன் புகைப்படக்காரர் என்று நினைத்து பாதுகாவலரை பிடித்துத் தள்ளியுள்ளார்.

ட்வைலைட் சீரிஸ் படங்கள் மூலம் பிரபலமானவர் ராபர்ட் பேட்டின்சன்(27). அவருடன் நடித்த கிறிஸ்டன் ஸ்டூவர்ட்டை காதலித்து பிரிந்துவிட்டார். இந்நிலையில் அவர் கிழக்கு ஹாலிவுட்டில் உள்ள ட்ரோபடோர் இரவுநேர கிளப்பிற்கு நண்பர்களுடன் சென்றுள்ளார். அங்கு நண்பர்களுடன் நேரத்தை செலவிட்டு வெளியே வந்துள்ளார்.

காரில் ஏறச் சென்ற அவரை பத்திரிக்கைப் புகைப்படக்காரர்கள் சூழ்ந்து கொண்டனர். இதனால் கடுப்பான அவர் திடீர் என்று ஒருவரின் முகத்தில் கையை வைத்து தள்ளிவிட்டார். இதில் அந்த நபரின் கண்ணாடி கீழே விழுந்தது. அவரை யாரை தள்ளிவிட்டாரோ அவர் கிளப்பின் பாதுகாவலர்.

இந்த சம்பவம் கிசுகிசு எழுதும் இணையதளத்தின் கேமராவில் பதிவாகி இருந்தது.

 

Post a Comment