கடல் நண்பர்களை அடக்குவார் இல்லையா?: புலம்பும் தயாரிப்பாளர்கள்

|

சென்னை: சீ பட நாயகனின் நண்பர்கள் ஷூட்டிங்ஸ்பாட்டில் செய்யும் அலப்பறையை தாங்க முடியவில்லையாம்.

நடிப்பு குடும்பத்தில் இருந்து வந்த நாயகன் சீ படத்தில் நடித்தார். ஆனால் படம் ஊத்திக் கொண்டது. இதனால் கவலையில் உட்கார்ந்திருந்த அவருக்கு பல வாய்ப்புகள் வந்துள்ளன. இதனால் குஷியாகி படங்களில் நடித்து வருகிறார்.

நாயகன் ஷூட்டிங்கிற்கு வருகையில் அவருடன் படித்தவர்கள், நண்பர்கள் என்று தினமும் 4 முதல் 5 பேர் வருகிறார்களாம். அவர்கள் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஆட்டம் போடுகிறார்களாம். தயாரிப்பு ஆட்களை ஓவராக வேலை வாங்குகிறார்களாம். தினசரி செலவை எகுற விட்டுவிடுகிறார்களாம். இதையெல்லாம் பார்த்து தயாரிப்பாளர்கள் முணுமுணுக்கிறார்களாம்.

இது நாயகனின் அப்பாவுக்கு தெரியுமா?

 

Post a Comment