அகமதாபாத்: கௌன் பனேகா க்ரோர்பதி நிகழ்ச்சியில் வழக்கறிஞர்களை அவமதித்தாக தொடரப்பட்ட வழக்கில் அகமதாபாத் நீதிமன்றம் அமிதாப் பச்சனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் கௌன் பனேகா க்ரோர்பதி அதாவது கோடீஸ்வரன் நிகழ்ச்சியின் 7வது சீசனை நடத்தி வருகின்றார். டிவியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியின் விளம்பரத்தில் வழக்கறிஞர்களையும், அவர்களின் தொழிலையும் இழிவுபடுத்தியுள்ளனர் என்று கூறி வழக்கறிஞர் தாவிந்தர் சிங் ராக்கட் என்பவர் அகமதாபாத்தில் உள்ள நீதிமன்றம் ஒன்றில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு தலைமை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் எஸ்.வி. பாரேக் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த அவர் நிகழ்ச்சியை நடத்தும் அமித்பா பச்சன், தயாரிப்பாளர் சித்தார்த் பாசு மற்றும் 5 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
அமிதாப் நிகழ்ச்சியின் விளம்பரத்தில் வரும் ஒரு காட்சியில் வழக்கறிஞர் ஒருவர் இதை நான் எதிர்க்கிறேன் என்று கத்திக் கொண்டு மேஜையில் தட்டுகிறார், அதற்கு மற்றொரு வழக்கறிஞர் அவரிடம் முதலில் நீதிமன்ற நடவடிக்கைகள் துவங்கட்டும் என்கிறார் என்று ராக்கட் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
Post a Comment