சென்னை: படத்துக்கு படம் வித்தியாசம் காட்ட மெனக்கெடும் நடிகர் தற்போது தான் நடித்து வரும் படத்திற்காக அரிசி சாதம், கறி வகைகளை தவிர்த்துள்ளாராம்.
இந்த நடிகரின் பெரைக் கூறினாலே நம் நினைவுக்கு வருவது அவரது வித்தியாசமான கெட்டப்புகள் தான். மனிதர் இப்படி நினைத்த நேரம் உடம்பை சட்டென ஏத்தி, படால் என்று குறைத்து விடுகிறாரே. இவரால் மட்டும் எப்படி இவ்வாறு செய்ய முடிகிறது என்று பலர் வியப்பதுண்டு.
அண்மை காலமாக அவர் நடித்த படங்கள் ஓடாத நிலையில் பிரமாண்டத்திற்கு பெயர் போன இயக்குனரின் படத்தில் நடித்து வருகிறார். இந்த இயக்குனர் படம் எடுத்தாலே ஹிட் தான் என்ற நிலை உள்ளதால் இப்படம் தனக்கு நிச்சயம் ஹிட்டடிக்கும் என்று நம்புகிறார் நடிகர்.
படத்தின் ஒருபாதியில் அவர் ஒல்லிக்குச்சியாக
வர வேண்டுமாம். அதற்காக கடும் டயட் செய்து 10 கிலோவுக்கு மேல் எடையை குறைத்து எலும்பும், தோலுமாக உள்ளாராம். படம் முடியும் வரை உடல் எடை கூடிவிடக் கூடாது என்பதால் அவர் பல மாதங்களாக அரிசி சாதம், அசைவ உணவுகளை தவிர்த்து வெறும் பழம், காய்கறிகளை சாப்பிட்டு வருகிறாராம்.
கால் வயிறும், அரை வயிறுமாய் சாப்பிட்டு உடல் எடையை மெயின்டெய்ன் பண்ணுகிறாராம்.
Post a Comment