நடிகர் விஜய் உறவினருக்கு சொந்தமான நிறுவனத்தில் ரெய்டு!

|

தூத்துக்குடி: தூத்துக்குடியில் நடிகர் விஜய்யின் உறவினருக்கு சொந்தமான தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் வருமானவரித் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

தூத்துக்குடி சேவியர் பிரிட்டோ என்பவருக்கு சொந்தமான இன்டேவ் லாஜிஸ்டிக்ஸ் என்ற ஏற்றுமதி இறக்குமதி நிறுவனம் தூத்துக்குடி கெரக்கோ தெருவில் உள்ளது. இந்த நிறுவனத்தில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

நடிகர் விஜய் உறவினருக்கு சொந்தமான நிறுவனத்தில் ரெய்டு!

இந்நிறுவனத்திற்கு சொந்தமான கன்டெய்னட்டல் கன்டெய்னர் பிரிக்ட் ஸ்டேஷன் மற்றும் சரக்குபெட்டக தளங்களிலும் ஒரேநேரத்தில் 25க்கும் மேற்ப்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய தனியார் ஏற்றுமதி நிறுவனத்தின் உரிமையாளரான சேவியர்பிரிட்டோ நடிகர் விஜய்க்கு நெருங்கிய உறவினர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சமீபத்தில் வெளியான சட்டம் ஒரு இருட்டறை, வரவிருக்கும் சும்மா நச்சுன்னு இருக்கு ஆகிய படங்களின் தயாரிப்பாளர் இந்த சேவியர் பிரிட்டோ. இயக்குநர் சிநேகா பிரிட்டோ இவரது மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment