கொஞ்சம் ஓவரா கேட்டுட்டேனோ: புலம்பித் தள்ளும் இளம் ஹீரோ

|

சென்னை: இளம் ஹீரோ ஒருவர் தன்னை தேடி வந்த வாய்ப்பை ஓவராக சம்பளம் கேட்டு நழுவவிட்டதை நினைத்து புலம்புகிறாராம்.

சின்னத் திரையில் இருந்து வந்து தற்போது பெரியதிரையில் கொடிகட்டிப் பறக்கும் ஹீரோ தனது சம்பளத்தை கோடிகளில் கேட்கிறாராம். அவருக்கு ரசிகர் கூட்டம் உள்ளது என்று நினைக்கும் சில தயாரிப்பு நிறுவனங்கள் அவரை மீண்டும் மீண்டும் ஒப்பந்தம் செய்கின்றன.

இந்நிலையில் சிவப்பு ஜெயின்ட் மூவீஸ் அதிபர் அந்த நடிகரை தனது தயாரிப்பில் நடிக்க வைக்க அவருடன் பேசி அட்வான்ஸையும் கொடுத்துவிட்டாராம். ஆனால் அந்த நடிகர் அட்வான்ஸை வாங்கிய பிறகு யோசித்துப் பார்த்துவிட்டு சம்பளம் பத்தாது. மேலும் சில கோடிகளை அனுப்புங்கள் என்று கூலாக கூறினாராம்.

இதை கேட்ட ஜெயின்ட் அதிபர் கடுப்பாகி அப்படி ஒன்றும் கோடிகளை கொட்டிக் கொடுத்து இவரை வைத்து படமே தயாரிக்க வேண்டாம் என்று அந்த முயற்சியை நிறுத்தி வைத்துள்ளாராம்.

அடடா பெரிய நிறுவனத்தின் படம் போச்சே, ஒரு வேளை கொஞ்சம் ஓவரா கேட்டுவிட்டேனோ என்று புலம்புகிறாராம் அந்த ஹீரோ.

 

Post a Comment