மெட்ராஸ் கஃபேவை மலேசியாவில் திரையிடக் கூடாது: தமிழர்கள் போராட்டம்

|

கோலாலம்பூர்: மலேசிய அரசு சாரா தமிழ் இயக்கங்களின் முடிவின்படி "மெட்ராஸ் கஃபே" படத்தை மலேசியாவில் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக் கடிதம் நேற்று மலேசிய உள்துறை அமைச்சகம், மலேசிய திரைப்படத் தணிக்கை வாரியம் ஆகியவற்றுக்கு பதிவுத் தபாலில் அனுப்பி வைக்கப்பட்டது. அத்துடன் தொலைநகலிலும் அக்கடிதம் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மலேசியா தமிழர்களின் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது,

மெட்ராஸ் கஃபே படத்தை அமைதிப் பூங்காவாக இருக்கும் மலேசியாவில் திரையிட அனுமதிக்கக் கூடாது. ராஜபக்சே உதவியுடன் வெளிவரும் இப்படம் தமிழீழ விடுதலை போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாகவும், உடமைகளையும் உரிமைகளையும் இழந்து வாழும் ஈழத் தமிழர்களை களங்கப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது. ஆகவே இப்படத்தை மலேசியாவில் தடை செய்ய வேண்டும் என்று கோருகிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ராஸ் கஃபேவை மலேசியாவில் திரையிடக் கூடாது: தமிழர்கள் போராட்டம்

மெட்ராஸ் கஃபே படத்திற்கு எதிராக உலகத் தமிழர்களின் போராட்டம் வலுத்துள்ளது. இப்போது அப்படத்தை எதிர்த்து மலேசியா தமிழர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதே போல் இங்கிலாந்திலும் சினி வேர்ல்ட் நிறுவனத்திடம் மெட்ராஸ் கஃபே படத்தை திரையிடக் கூடாது என்ற கோரிக்கையை ஈழத் தமிழர்கள் முன்வைத்துள்ளனர். இதனால் தினமும் சினி வேர்ல்ட் நிறுவனத்திற்கு பல அழைப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. கனடா நாடு டொரண்டோவில் ஈழத் தமிழர்கள் இப்படத்தை திரையிடக் கூடாது என கோரிக்கை எழுப்பி உள்ளனர்.

மெட்ராஸ் கஃபே படத்தை தமிழகத்தில் திரையிடக் கூடாது என்று நாம் தமிழர் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment