மும்பை: மெட்ராஸ் கஃபே படத்தை எதிர்ப்பவர்கள் எதிர்க்கட்டும் என்று ஜான் ஆபிரகாம் தெரிவித்துள்ளார்.
இந்தி படமான மெட்ராஸ் கஃபேயில் விடுதலைப் புலிகளை தீவிரவாதிகளாக சித்தரித்துள்ளனர். இதையடுத்து படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து ஜான் ஆபிரகாம் கூறுகையில்,
அனைவரின் கருத்தையும் மதிக்கிறேன். மிஸ்டர் வைகோ, மிஸ்டர் சீமான் ஆகியோரின் கருத்துகளையும் மதிக்கிறேன். ஆனால் அவர்கள் எங்களின் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும். இது ஜனநாயக நாடு. சென்சார் போர்டுக்கு படத்தில் ஏதும் பிரச்சனை இல்லை என்றால், அதில் எதுவும் தவறாக இல்லை என்று தான் அர்த்தம். எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் தெரிவிக்கட்டும். ஆனால் நாங்கள் படத்தை கண்டிப்பாக ரசிகர்களிடையே கொண்டு செல்வோம் என்றார்.
Post a Comment