கோச்சடையானில் வெறும் 2 நாட்கள் நடிக்க ரூ. 3 கோடி வாங்கிய தீபிகா படுகோனே

|

சென்னை: கோச்சடையான் படத்தில் இரண்டு நாட்கள் நடிக்க தீபிகா படுகோனேவுக்கு ரூ.3 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாம்.

சௌந்தர்யா அஸ்வின் தனது தந்தை ரஜினிகாந்த், தீபிகா படுகோனேவை வைத்து எடுத்துள்ள படம் கோச்சடையான். இந்தியாவிலேயே முதன்முறையாக கோச்சடையானில் தான் மோஷன் கேப்ச்சர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த படத்தில் பாலிவுட் நடிகை தீபிகா இரண்டு நாட்கள் தான் நடித்துள்ளார். அவர் வரும் காட்சிகளை வெறும் 48 மணிநேரத்தில் படமாக்கப்பட்டதாக சௌந்தர்யா தெரிவித்துள்ளார். இந்த இரண்டு நாட்கள் நடித்ததற்கு அம்மணிக்கு ரூ. 3 கோடி சம்பளமாம்.

கோச்சடையானில் வெறும் 2 நாட்கள் நடிக்க ரூ. 3 கோடி வாங்கிய தீபிகா படுகோனே

கோச்சடையானில் நடிக்க பாலிவுட் நடிகைகள் வித்யா பாலன், கத்ரீனா கைஃப், நம்ம அனுஷ்கா ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டது. இறுதியில் அந்த வாய்ப்பு தீபிகாவுக்கு கிடைத்தது. இது தான் தீபிகா நடித்துள்ள முதல் தமிழ் படம் ஆகும்.

விநாயகர் சதுர்த்தி அன்று வெளியான கோச்சடையான் டீஸரை இதுவரை 2 மில்லியன் பேர் யூடியூப்பில் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment