சென்னை: யாருக்கு எங்கே எப்போது சுக்கிர தசை அடிக்கும் என்று கணிக்க முடியாது, கோடம்பாக்கத்தில்.
ஓஹோ என வருவார் என கணிக்கப்பட்டவர்கள் காணாமல் போவதும், இவராவது தேறுவதாவது என ஒதுக்கப்பட்டவர்கள் ஓஹோவென வருவதும் இங்கு சகஜம்.
சிவகார்த்திகேயன் இரண்டாவது ரகம். மெரினா வந்த போது அவரை கண்டு கொள்ள ஆள் இல்லை. ஆனால் அந்தப் படம் எதிர்மறை விமர்சனத்திலேயே ஓரளவு ஓடிவிட்டது. மனம் கொத்திப் பறவைக்கும் இந்த நிலைதான்.
ஆனால் கேடிபில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல் இரண்டும் ஹிட்டடிக்க, கோடிகளில் சம்பளம் கேட்கும் ஹீரோவானார். இப்போது வருத்தப்படாத வாலிபர் சங்கம் நல்ல வசூலைக் குவிக்க, அவர் மார்க்கெட் சூடாகிவிட்டது.
இதுவரை ரூ 2 கோடி வரை சம்பளம் பெற்றுவந்த சிவகார்த்திகேயனுக்கு இன்றைய மாரக்கெட் மதிப்பு ரூ 5 கோடியாம். இதை அவர் கேட்கிறாரோ இல்லையோ... தர தயாரிப்பாளர்கள் தயாராகவே உள்ளார்களாம்.
இப்போது, ரூ 10 கோடி பட்ஜெட்டில் படமெடுக்கக் காத்திருக்கும் தயாரிப்பாளர்களுக்கு கிரீன் சிக்னல் கொடுக்கிறாராம் சிவகார்த்திகேயன்.
கரன்சில மட்டும் கவனமிருந்தா பத்தாது சிவா... கதையிலும் கவனமா இல்லேன்னா... ராமராஜனை நினைவிருக்கிறதா?
Post a Comment