சென்னை: தான் வளர்ந்து பெரியவளானதும் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு சரண்யா நாக் அஜீத் குமாரிடம் பல ஆண்டுகளுக்கு முன்பு தெரிவித்துள்ளார்.
காதல் படத்தில் சந்தியாவுக்கு தோழியாக வந்தவர் சரண்யா நாக். அதன் பிறகு சந்தியா சில படங்களில் ஹீரோயினாக நடித்துவிட்டு தற்போது சந்தானத்திற்கு ஜோடியாக நடித்துள்ளார்.
லேட்டானாலும் சரண்யா நாக் பொறுமையாக இருந்து ஹீரோயினாக நடித்து வருகிறார். அவர் தற்போது 4 படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். அவருக்கு முன் மாதிரி யார் என்றால் அது தனுஷ் தானாம். பெரிதாக லுக் இல்லாவிட்டாலும் அவரின் அபாரமான வளர்ச்சி சரண்யாவை இம்பிரஸ் செய்துவிட்டதாம்.
சரண்யாவுக்கு அஜீத் குமாருடன் ஜோடி சேர்ந்து நடிக்க ஆசையாக உள்ளதாம். சரண்யா அஜீத், பார்த்திபன், தேவயானி நடித்த நீ வருவாய் என படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். அப்போது அவர் விளையாட்டுத் தனமாக அஜீத்தை பார்த்து, நான் வளர்ந்து பெரியவள் ஆனதும் என்னை தான் கட்டிக்கணும் என்று கூறியுள்ளார்.
Post a Comment