உனக்கெதுக்குப்பா இந்த வேலை.. பணத்தை இழக்காதே! - கேப்டனின் அறிவுரையால் நெகிழ்ந்த விஷால்

|

சென்னை: சொந்தப் படம் தயாரிக்கலாம். ஆனால் இன்னொருவர் தயாரித்த படத்தை வெளியிடும் முயற்சியில் இறங்கினால் பணத்தை இழப்பதுதான் மிச்சம். உனக்கெதற்கு அந்த வேலை, என்று நடிகர் விஷாலுக்கு அட்வைஸ் செய்தாராம் விஜயகாந்த்.

மதகஜராஜா' படம் முடிவடைந்து 8 மாதங்களாக திரைக்கு வராமல் முடங்கிக் கிடந்ததால், அந்த படத்தை திரைக்கு கொண்டுவர விஷால் பெரும் முயற்சி செய்தார்.

இதற்காக, விஷால் பிலிம் பேக்டரி என்ற பட நிறுவனத்தை தொடங்கி, அந்த பட நிறுவனம் சார்பில் ‘மதகஜராஜா' படத்தை தயாரிப்பாளரிடம் இருந்து வாங்கி, வெளியிட முன்வந்தார்.

உனக்கெதுக்குப்பா இந்த வேலை.. பணத்தை இழக்காதே! - கேப்டனின் அறிவுரையால் நெகிழ்ந்த விஷால்

தனது சொந்தப் பணம் பல கோடிகளை இதற்காக செலவழித்தார். அப்படியிருந்தும் அந்த படம் நிதி நெருக்கடியிலிருந்து வெளிவராமல் முடங்கிப் போக, ‘மதகஜராஜா'வை விஷால் தயாரிப்பாளரிடமே திருப்பிக் கொடுத்து விட்டார்.

இந்த பிரச்சினை பற்றி கேள்விப்பட்ட விஜயகாந்த், விஷாலுக்கு போன் செய்து, ‘‘படத்தை வெளியிடும் முயற்சிகளில் இனிமேல் ஈடுபடாதே. நானும் உன்னை மாதிரி பிறருக்கு உதவி செய்யப் போய் பணத்தை இழந்ததுதான் மிச்சம்.

படம் வெளிவரவில்லையே என்று பதற்றப்படாதே. நடிப்பதோடு வேலை முடிந்தது என்று நினைத்து, அடுத்த படத்தில் கவனம் செலுத்து.

சொந்த படம் எடுக்கலாம். ஆனால், இன்னொருவர் தயாரித்த படத்தை வெளியிடும் வேலையில் இறங்காதே," என்றாராம்.

இதைக் கேட்ட விஷால் நெகிழ்ந்து போய்விட்டார்.

‘கேப்டனுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. அவருடைய அறிவுரையை ஏற்று நடப்பதே அவருக்கு நான் சொல்லும் நன்றியாக இருக்கும்'' என்று அனைவரிடமும் சொல்லிக் கொண்டிருக்கிறார் விஷால்.

 

Post a Comment