விஷாலின் பாண்டிய நாட்டை வாங்கியது வேந்தர் மூவீஸ்!

|

விஷால் நடித்து தயாரித்து வரும் பாண்டிய நாடு படத்தின் வெளியீட்டு உரிமையை வேந்தர் மூவீஸ் நிறுவனம் வாங்கியது.

விஷால் பிலிம் சர்க்யூட் என்ற பெயரில் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்த விஷால், அதன் முதல் தயாரிப்பாக பாண்டிய நாடு படத்தை அறிவித்தார்.

விஷாலின் பாண்டிய நாட்டை வாங்கியது வேந்தர் மூவீஸ்!

விஷால் ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். ‘வெண்ணிலா கபடி குழு', ‘நான் மகான் அல்ல'. ‘ஆதலால் காதல் செய்வீர்' படங்களைத் தந்த சுசீந்திரன் இயக்குகிறார். முதல் முறையாக சுசீந்திரன் படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமையா வேந்தர் மூவீஸ் பெற்றுள்ளது.

சில வாரங்களுக்கு முன்பே இந்தப் படத்தை வாங்க விஷால் - வேந்தர் மூவீஸ் பேச்சு வார்த்தை நடந்தது. ஆனால் விலை படியாததால், படத்தைத் தர மறுத்துவிட்டார் விஷால்.

விஷாலின் பாண்டிய நாட்டை வாங்கியது வேந்தர் மூவீஸ்!

இப்போது, இரு தரப்பும் ஒரு சுமூக முடிவுக்கு வந்திருப்பதால், படத்தின் உரிமையைத் தர ஒப்புக் கொண்டார் விஷால்.

தலைவா படத்துக்குப் பிறகு வேந்தர் மூவிஸ் வெளியிடும் படம் பாண்டிய நாடு.

 

Post a Comment