மாமா ஏ.ஆர். ரஹ்மான் வழியில் ஹாலிவுட் போகும் ஜி.வி.பிரகாஷ்

|

சென்னை: இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் ஹாலிவுட் படத்தில் இசையமைக்க கையெழுத்திட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘வெயில்' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ் குமார். இவர் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் அக்கா மகன்.

25 திரைப்படங்கள் வரை இசையமைத்துள்ள ஜி.வி.பிரகாஷ் தற்போது ஹாலிவுட் படம் ஒன்றிக்கு இசையமைக்க கையெழுத்திட்டுள்ளாராம்.

இதனை அவரே டுவிட்டர், ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். விரைவில் ஒரு ஹாலிவுட் படத்திற்கு இசையமைக்க போகிறேன். இதுகுறித்த அறிவிப்பை சம்பந்தப்பட்ட பட நிறுவனமே விரைவில் அறிவிக்கும். அதுவரைக்கும் பொறுத்திருங்கள் என்று கூறியிருக்கிறார்.

மாமா ஏ.ஆர். ரஹ்மான் வழியில் ஹாலிவுட் போகும் ஜி.வி.பிரகாஷ்

ஜி.வி.பிரகாஷின் மாமாவான ஏ.ஆர்.ரஹ்மான் ஹாலிவுட்டில் கால்பதித்து இரண்டு ஆஸ்கார் விருதுகளை வாங்கி வந்தார். அதுபோல், ஜி.வி.பிரகாஷும் ஹாலிவுட்டில் வெற்றி பெறுவாரா? என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

வெயில் தொடங்கி ‘ராஜா ராணி' வரை நிறைய ஹிட் பாடல்களை கொடுத்து ரசிகர்களை கவர்ந்த ஜி.வி.பிரகாஷ். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் இசையமைத்த இவர், சமீபத்தில்தான் இந்தி படம் ஒன்றிலும் இசையமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment