தொடரும் வதந்திகள்.... அப்செட்டான நடிகர்

|

சென்னை: சமீபத்தில் தனது லீடர் படத்தில் சொல்லண்ணாத் துயரில் சிக்கிய பஞ்ச் நடிகரைப் பற்றித் தான் கோலிவுட்டில் பரபரப்பே.

நடிகரின் ஒவ்வொரு அசைவையும் கண் கொத்திப் பாம்பாக கவனிக்கும் சிலர், அவரைப் பற்றி இல்லாததயும், பொல்லாததையும் கிளப்பி விடுகின்றனராம்.

அந்தவகையில் சமீபத்தில், நடிகரின் ஏரியா படத்தின் படபிடிப்பு மழையினால் சில நாட்கள் நிறுத்தப்பட, இது தான் சரியான சமயம் என இந்த படமும் பிரச்னையில் சிக்கி விட்டது என இப்போதே கோலிவுட்டில் கொளுத்திப் போட்டுவிட்டார்களாம் சிலர்.

தகவலறிந்த தயாரிப்பாளர் நொந்து நூடுல்ஸ் ஆகிவிட்டாராம். நடிகருக்கு மறுப்பு அறிக்கை கொடுப்பதே புல்டைம் வொர்க் ஆகிடும் போலயே என்கிறார்கள் அவரது நெருங்கிய வட்டாரத்து நண்பர்கள் சிலர்.

 

Post a Comment