தொடர்பு எல்லைக்கு வெளியில் இருக்கும் நடிகர்

|

தளபதி என்ற பட்டத்தை பெயரில் வைத்திருப்பதாலோ என்னவோ அரசியல் பிரச்சினையில் படத்தை வெளியிட முடியாமல் சிக்கிக் கொண்ட நடிகர் தற்போது மிகவும் உஷாராக இருக்கிறாராம்.

லீடர் படத்தை எடுத்த இயக்குநர் மீண்டும் நடிகரைத் தொடர்பு கொள்ள முயன்றாராம். ஐயோ, சாமி போடும்டா பட்ட சூடு என தொடர்பு எல்லைக்கு வெளியில் இருப்பதாகக் கூறி இயக்குநரை சந்திக்க மறுத்து விட்டாராம் நடிகர்.

பொதுவாகவே படத்தைத் தவிர வெளியில் ,மிகவும் அமைதியான ஆள் என்ற பெயர் எடுத்த நடிகர், இப்போது இன்னும் மௌன குரு ஆகிவிட்டாராம். அடுத்து நடித்துக் கொண்டிருக்கும் படத்தின் ஸ்கிரிப்டை மீண்டும் மீண்டும் வாங்கிப் படித்துக் கொள்கிறாராம். தன்னையும் அறியாமல் அப்படத்திலும் ஏதேனும் உள் குத்து அமைந்து விடக் கூடாது என்பதில் மிகவும் உஷாராக இருக்கிறாராம் நடிகர்.

 

Post a Comment