ஏழரையை கூட்டிய காமெடி நடிகர்: காண்டாகி இருக்கும் அரசு அதிகாரிகள்

|

சென்னை: விலை உயர்ந்த கார் வாங்கும் காமெடி நடிகர் தான் நடித்துள்ள படம் ஒன்றில் அரசின் குட்கா விளம்பரத்தை நக்கலடித்துள்ளாராம். படம் வரட்டும் அப்புறம் பார்த்துக்குவோம் என்று அரசு அதிகாரிகள் சூடாக உள்ளார்களாம்.

விலை உயர்ந்த கார் வாங்கும் காமெடி நடிகர் தீபாவளிக்கு ரிலீஸாகும் சிறுத்தையின் படத்தில் நடித்துள்ளார். வழக்கமாக தனது படத்தில் யாரையாவது கிண்டலடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார் அந்த காமெடியன். இந்நிலையில் சிறுத்தையின் படத்தில் படம் துவங்கும் முன்பு தியேட்டர்களில் வரும் குட்கா விளம்பரத்தை கிண்டல் செய்துள்ளாராம்.

அந்த விளம்பரத்தை பார்த்து பலர் திருந்தி வரும் நிலையில் காமெடியனின் நக்கல் அரசு அதிகாரிகளை கடுப்பேத்தியுள்ளதாம். படம் வரும் வரை காத்திருப்போம். வந்த பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று இருக்கிறார்களாம் அதிகாரிகள்.

படம் வந்த பிறகு நடிகருக்கு ஏதோ பெரிதாக காத்திருக்கிறது.

 

Post a Comment