சென்னை: ஒரு எழுத்து படம் மூலம் கோலிவுட் வந்த முன்னாள் நடிகையின் மகளுக்கு வாழ்நாள் முழுவதும் நடிகையாக இருக்க ஆசையில்லையாம்.
டோலிவுட்டில் அறிமுகமான அந்த முன்னாள் நடிகையின் உயர்ந்த மகள் ஒரு எழுத்து படம் மூலம் கோலிவுட் வந்தார். தெலுங்கு படம் ஊத்திக் கொண்டபோதும் தமிழில் அவர் நடித்த படம் ஹிட்டானது. இருப்பினும் அம்மணிக்கு ஏனோ தமிழகத்தில் மவுசு இல்லாமல் உள்ளது.
அடுத்ததாக தனது தாயின் குருவின் படத்தில் நடித்தார். அந்த படம் தனது மார்க்கெட்டை தூக்கி நிறுத்தும் என்று நம்பினார். பாவம் படம் பப்படமாகிவிட்டது. அவருக்கு வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆசையாம். மேலும் நடிப்பு தான் வாழ்வாதாரம் என்றும் கூறிவிட முடியாது என்கிறார் அவர்.
அதனால் வாழ்நாள் முழுவதும் நடிகையாகவே இருக்கும் எண்ணமில்லையாம். அதற்காக நடிப்புக்கு முன்னுரிமை கொடுக்கவில்லை என்றும் எடுத்துக்கொள்ளக் கூடாதாம். நடிக்கும் வரை முழு ஈடுபாட்டோடு நடிப்பாராம்.
Post a Comment