விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா வரும் அக்டோபர் 2-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டிலிருந்து அடுத்தடுத்து நான்கு வெற்றிப் படங்களில் நடித்தவர் விஜய் சேதுபதி. சுந்தரபாண்டியன், நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம், பீட்சா, சூது கவ்வும் என அவரது வெற்றிகள் தொடர்வதால், கோடம்பாக்கத்தில் அதிகம் கவனிக்கப்படும் நடிகராகிவிட்டார்.
'சூது கவ்வும்' படத்திற்குப் பிறகு அவர் நடிக்கும் படம் 'இதற்குதானே ஆசைபட்டாய் பாலகுமாரா'. இவருடன் அஸ்வின், நந்திதா மற்றும் சுவாதி ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்தை லியோ விஷன் நிறுவனம் தயாரிக்க கோகுல் இயக்கியிருக்கிறார். சித்தார்த் இசையமைத்துள்ளார்.
இப்படத்தை இந்த மாதம் 27-ந்தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்திருந்தனர். அன்றைய தேதி ராஜா ராணி' போன்ற படங்கள் ரிலீஸ் ஆவதால், காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2-ந்தேதி ரிலீஸ் செய்கின்றனர்.
Post a Comment