சென்னை: காமராஜரை அவமதித்து பேசவில்லை என்றும், பத்திரிகையில் தவறாக பிரசுரித்துள்ளனர் என்றும் கருணாஸ் மறுப்பு அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தேவர் ஜெயந்தி பொதுக்கூட்டம் கோவையை அடுத்த பள்ளபாளையம் கிராமத்தில் செப்டம்பர் 15-ம் தேதி நடந்தது.
அதில் பெருந்தலைவர் காமராஜரைப் பற்றி நான் தவறாகப் பேசியதாக ஒரு வார இதழில் செய்தி வெளியிட்டுள்ளனர்.
தமிழகத்துக்கு பெருமை சேர்த்த, கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராஜரை நான் வழிகாட்டியாக நினைத்து வாழ்ந்து வருகிறேன்.
நான் பேசியதை உண்மைக்குப் புறம்பாக வெளியிட்ட பத்திரிகை மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப் போகிறேன்.
காமராஜர் பற்றி நான் பேசியதாக வரும் செய்திகளை யாரும் நம்ப வேண்டாம்.
தமிழர்களின் ஒற்றுமைக்காகவும், ஜாதி வேறுபாடுகளைக் களைந்து சமத்துவ சமுதாயம் அமைய வேண்டும் என்பதற்காகவும் களப்பணியாற்றி வரும் என் மீது ஜாதி முத்திரைக் குத்த வேண்டாம்.
-இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment